News March 31, 2025
விஷம் குடித்து தொழிலாளி பலி

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் அல்லி (55). குடிபழக்கம் கொண்ட இவர் நேற்றைய தினம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை அவரின் மனைவி குமாரி கண்டிக்க, இதில் விரக்தி அடைந்த அல்லி நேற்று பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை அவரை மீட்ட உறவினர்கள் தர்மபுரி மருத்துவமறையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Similar News
News April 3, 2025
மகளிர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கலெக்டர்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும் கிராம மட்டத்தில் 10, 20 பெண்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுக்கள் ஆகும் இந்த குழுக்களுக்கு சுழல் நிதி கடன் பொருளாதார கடன் வங்கி கடன்கள் வழங்கப்படுகின்றது. இந்த கடன் உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தர்மபுரி கலெக்டர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார்.
News April 3, 2025
கல்வி உரிமைச் சட்டம் (RTE) – 2025 விண்ணப்ப விவரங்கள்

கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ், தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்க விண்ணப்பிக்க தேவையான முக்கிய தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை LKG மற்றும் 1-ம் வகுப்பில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். வரும் ஏப்ரல்.22 முதல் மே.20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தருமபுரி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News April 3, 2025
தருமபுரியில் ஒரு ஊட்டி

மேலே நீங்கள் பார்க்கும் படம் ஊட்டியோ, கொடைக்கனலோ அல்ல. கிழக்குத்தொடர்ச்சி மலைகளுள் ஒன்றான சித்தேரிமலை தான். தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள சித்தேரிமலை பசுமையான காடுகளையும், அழகிய மலை தொடர்களையும் செல்லும் வழி எங்கும் ரசித்துக் கொண்டே செல்லலாம். தற்போது வெயில் வாட்டி வைத்து வரும் நிலையில், இங்கு குடும்பத்துடன் சென்றால் அமைதியான சூழலில் பொழுதை கழிக்க இது ஒரு நல்ல ஸ்பாட். ஷேர் பண்ணுங்க