News April 27, 2025

விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

image

சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தனா (18). தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 23ம் தேதி பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சையில் இந்த கீர்த்தனா நேற்று உயிரிழந்தார். மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து வீசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 21, 2025

தருமபுரி வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்!

image

தருமபுரி மாவட்ட பொதுமக்களுக்கு அறிய வாய்ப்பு, SIR திட்டத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களுக்காக, புதிய வாக்காளர்கள் சேர்தல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் வரும் டிச.27 (சனி), டிச.28 (ஞாயிறு) மற்றும் ஜன.03 (சனி), ஜன.04 (ஞாயிறு) ஆகிய 4 நாட்களில் நடைபெறுகிறது. மேலும்,வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, மாறுதல் செய்ய அணுகலாம்.

News December 21, 2025

தருமபுரியை உலுக்கிய பெரும் சோகம்!

image

தருமபுரி, கொண்டகரஅள்ளி பகுதியை சேர்ந்த காவியா (17), தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பாராமெடிக்கல் மயக்கவியல் (Anaesthesia Technology) பயின்று வருகிறார். பள்ளிப் படிப்பைத் தமிழ் வழியில் முடித்திருந்த அவர், மருத்துவப் பாடங்கள் ஆங்கிலத்தில் இருந்ததால் அவற்றைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான காவியா நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார்.

News December 21, 2025

தருமபுரி: gpay, phonepay பயனாளர்கள் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!