News January 3, 2025
விவசாய கடன் காலம் நீட்டிக்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் விவசாய கடன்கள் வழங்கி வருகின்றன. ஆனால் தற்போது அணைகளில் தண்ணீர் திறந்து விட தாமதமானதால், வாழை போன்ற பயிர்களை இப்போதுதான் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். எனவே, கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்குவதை ஜனவரி மாதம் வரை நீட்டிக்க தூத்துக்குடி மாவட்ட பிஜேபி தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News September 17, 2025
தூத்துக்குடி: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

தூத்துக்குடி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தஞ்சை மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு:0461-2325606. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!
News September 17, 2025
தூத்துக்குடி: 12.86 கோடி வரிபாக்கி பெண் அதிர்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டினத்தை சேர்ந்த கிளமென்ஸி என்ற பெண்ணுக்கு, ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக வருமான வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. எவ்வித தொழிலும் செய்யாத ஏழ்மை நிலையில் உள்ள தனக்கு இவ்வளவு பெரிய தொகைக்கு வரி பாக்கி வந்திருப்பதால் அதிர்ச்சி அடைந்த அவர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
News September 17, 2025
தூத்துக்குடி: TREND ஆகும் அஜித் படம்!

நடிகர் அஜித் நடித்து 2004ல் வெளியான அட்டகாசம் திரைப்படம் வரும் அக்டோபர்.30 ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது. அட்டகாசம் திரைப்படம் தூத்துக்குடி மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாகியது. தற்போது தீபாவளியை முன்னிட்டு ரீரிலீஸ் ஆக உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்ட அஜித் ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். அஜித் ரசிகர்களுக்கு SHARE பண்ணுங்க.