News May 7, 2025
விவசாயி வெட்டி படுகொலை காவல்துறை விசாரணை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் ஆபிரகாம். விவசாயியான இவர் இரவு வீட்டில் இருந்த போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன கோவிலாங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையற்ற உறவால் கொலை நடந்ததாக தகவல்.
Similar News
News December 3, 2025
தோரணமலை முருகன் கோயிலில் நாளை கிரிவலம்

கடையம் அருகே அமைந்துள்ள தேரையர், சித்தர், அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன் கோயில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் நாளை காலை 6 மணி முதல் நடைபெறும். இந்த 6 கிலோ மீட்டர் சுற்றளவில் கிரிவலப்பாதையை வலம் வருவதற்கு சுமார் 1.15 மணி நேரம் ஆகும். அதனைத் தொடர்ந்து காலையும், மதியமும் அன்னதானம் நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க…
News December 2, 2025
குழந்தை தொழிலாளர் பணி – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்தில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம், 1986-ன் படி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு பணியிலும், 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக் கூடாது. அவ்வாறு பணி அமர்த்திய வேலையளிப்பவருக்கு ரூ.50,000/- வரை அபராதமும், 6 மாதங்கள் முதல் 2 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
News December 2, 2025
தோரணமலை முருகன் கோயில் கிரிவலம் தேதி அறிவிப்பு

தென்காசி கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாத பௌர்ணமியொட்டி நாளை டிசம்பர் 4 ந்தேதி காலை 6 மணிக்கு கிரிவலம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை அன்னதானம் மற்றும் பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட உள்ளது.


