News October 23, 2024
விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வருகிற அக்டோபர் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக வழங்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி!

வேலூர், பெருமுகை ஊராட்சி மன்ற தலைவராக புஷ்பராஜ் என்பவர் உள்ளார். இந்த ஊராட்சியில் பெருமளவு நிதி முறைகேடு நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பராஜூக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஊராட்சி மன்ற தலைவரின் செக் பவரை ரத்து செய்து கலெக்டர் சுப்புலட்சுமி இன்று அதிரடி உத்தரவிட்டார்.
News November 18, 2025
வேலூர்: தமிழிசை முன்னிலையில் SIR விளக்க கூட்டம்!

வேலூர், பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (நவ.18) நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்ஐஆர் வாக்காளர் திருத்த பணிகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது. இதில், பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
News November 18, 2025
வேலூர்: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <


