News June 27, 2024
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 27) நடைபெற்றது. இதில், சானல்களில் தண்ணீர் வரத்து, குளங்களை தூர்வாருதல், நீர்நிலைகளை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 13, 2025
குமரி வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

குமரி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் குமரி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000482, 9445000483 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News December 13, 2025
குமரியில் தொழிலாளி சடலமாக மீட்பு!

ஈசாந்திமங்கலம் ஞானதாசபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (57). பல தோப்புகளில் மரத்தில் இருந்து தானாக விழும் தேங்காயை எடுத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (டிச.12) காலையில் சீதப்பால் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிந்து அவர் எப்படி இறந்தார்? வேறு எதும் காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
News December 13, 2025
குமரி : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

குமரி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04652-227339) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க


