News June 27, 2024

விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நாளை காலை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கற்பகம் தெரிவித்துள்ளாா். இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, வேளாண்மை சம்பந்தமான கடனுதவிகள், வேளாண் இடுபொருட்கள், இயந்திரங்கள் மற்றும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

பெரம்பலூர்: பழங்குடியினரை தேடிச்சென்ற ரேஷன் அட்டைகள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 48 மலைவாழ் பழங்குடியின குடும்பங்களுக்கு, ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல் தெரிவித்தார். மேலும் ஆட்சியர் மிருணாளினி ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவாக வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்திய நிலையில், கோரையாறில் மலைவாழ் பழங்குடியின தம்பதியான விக்னேஷ், பிருந்தாவுக்கு ரேஷன் அட்டையை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுகுணா நேற்று வழங்கினார்.

News December 6, 2025

பெரம்பலூர்: 3வது நாளாக புறக்கணிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் 3-வது நாளாக கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட அளவிலான விசாரணை கோர்ட்டுகளில் இ-பைலிங் முறையை கடந்த 1-ந்தேதி முதல் போதுமான கட்டமைப்பு மற்றும் இணையதள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காமல், நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டி கடந்த 3 நாட்களாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

News December 6, 2025

பெரம்பலூர்: 50,000 வாக்காளர்கள் நீக்கம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் தற்போது வரை, 50,767 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார், மேலும் வாக்காளர் பட்டியல் மறு சரிபார்ப்பு பணிகள் 16-ந்தேதி வரை நடைபெறும் என்றும், இதில் ஆட்சேபனை உள்ளவர்கள் ஜன.15-ந் தேதி வரை வாக்காளர் பதிவு அல்லது உதவி அலுவலரை அணுகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!