News April 22, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 25.04.25 அன்று முற்பகல் 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
Similar News
News September 14, 2025
சிவகங்கை: கேஸ் சிலிண்டர் இருக்கா? இதை பாருங்க

சிவகங்கை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
News September 14, 2025
சிவகங்கை: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

சிவகங்கை மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், சிவகங்கை மாவட்ட மக்கள் 94431-11912 எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News September 14, 2025
சிவகங்கை: டூவீலரால் தம்பியை கொன்ற அண்ணன்

திருப்புவனம் அருகே மஞ்சகுடி பாலகிருஷ்ணன் மகன்கள் தர்மேந்திரன் 34, தயாளன் 25, இருவரும் அருகருகே வீடுகளில் வசிக்கின்றனர். தர்மேந்திரனின் டூவீலரை தயாளன் கேட்காமல் மதுரைக்கு எடுத்துச் சென்றதால் தம்பி தயாளனை கண்டித்துள்ளார். ஆத்திரத்தில் தயாளன் கடப்பாரையை எடுத்து டூவீலரை சேதப்படுத்தியுள்ளார். ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தம்பி தயாளனை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.