News February 18, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில், பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
அரியலூர்: கொரியர் வாகனம் விபத்து

அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் அருகே எஸ்.டி கொரியரின், நான்கு சக்கர வாகனம், இன்று திடீரென விபத்து ஏற்பட்டு கவிழ்ந்தது. மேலும் இந்த விபத்து எப்படி நடைபெற்றது, என்ன காரணம் என்பது குறித்து கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலையிலேயே ஏற்பட்ட விபத்து சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News November 24, 2025
அரியலூர்: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.