News June 25, 2024
விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை மறுநாள் (ஜூன்.27) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நேற்று வடகிழக்கு பருவ மழை தொடர்பாக மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News October 29, 2025
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News October 29, 2025
தூத்துக்குடியில் உயர்கல்வி சேர்க்கை.. கனிமொழி வாழ்த்து

நான் முதல்வன் திட்டத்தின் ‘கல்லூரிக் கனவு’ முன்னெடுப்பின் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 96.15% எனும் அளவில் உயர்ந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது எனவும், ஈடுபாட்டுடன் செயல்படுத்த துணைநின்ற பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றும் கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.


