News June 28, 2024
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பலர் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு விதமான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
Similar News
News November 23, 2025
கள்ளக்குறிச்சியில் கிடு கிடுவென உயர்ந்த விலை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்காளாகவே தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில், விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையாகிறது. அதே நேரத்தில் சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News November 23, 2025
கள்ளக்குறிச்சி: அப்பா என கூப்பிடாததால் கடித்து வைத்த நபர்!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே, கணவரை பிரிந்து தனது 2 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் பெண்ணுக்கு திருச்சியை சேர்ந்த ஆனந்த் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2வது குழந்தையிடம், தன்னை அப்பா என்று அழைக்குமாறு கூறியதற்கு, குழந்தை மறுத்த நிலையில், பல்வேறு இடங்களில் கடித்து வைத்துள்ளார். இதனால் குழந்தை சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 2 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 23, 2025
கள்ளக்குறிச்சி: வெந்நீரில் விழுந்த 3 வயது குழந்தை பலி!

கள்ளக்குறிச்சி: கண்டாச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ், மங்கையற்கரசி. இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், மோனிஷை குளிக்க வைப்பதற்காக வெந்நீர் வைத்துள்ளார் மங்கையற்கரசி. அப்போது விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வெந்நீரில் விழுந்துவிட்டான். இதில் படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தான். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


