News June 28, 2024
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் பொறுப்பேற்ற பிறநாகு இன்று(ஜூன் 28) முதன்முறையாக விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: SIR பணிச்சுமையால் BLO தற்கொலை!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர், சிவனார்தாங்கள் கிராமத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணி புரிந்து வந்த ஜாகிதா பேகம் என்பவர் SIR பணிச்சுமை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி நேற்று (நவ.20) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின், பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இது குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: கிரேன் அறுந்து விழுந்து ஒருவர் பலி!

கள்ளக்குறிச்சி: சொக்கனந்தலை சேர்ந்த கன்னியப்பன் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் எறையூர்பாளையம் அருகே கிரேன் மூலமாக வழிகாட்டி பலகையை பொருத்திய போது கிரேன் ரோப் அருந்து கீழே விழுந்ததில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில நேற்று (நவ.20) எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணியின் காவல்துறை விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.20) இரவு முதல் நாளை (நவ.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


