News April 19, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விழுப்புரம் கோட்ட அளவில், ஏப்ரல் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22.04.2025 அன்று காலை 11 மணியளவில், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களுக்குட்பட்ட அனைத்து விவசாய பிரதி நிதிகளும் தவறாது கலந்துகொள்ளலாம்.
Similar News
News November 10, 2025
விழுப்புரம்: குளத்தில் மூழ்கி இளைஞர் பலி!

விழுப்புரம்: வானூர் வட்டம், குயிலாப்பாளையம் வடக்குத் தெருவைச் சேர்ந்த மு.தமிழ்பிரியன்(28). திருமணமாகாத இவர், கொடைக்கானலில் தனியார் விடுதியில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த தமிழ்பிரியன் கடந்த சனிக்கிழமை அங்குள்ள குளத்தில் குளித்துள்ளார். அப்போது குளத்தின் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 10, 2025
விழுப்புரம்: பெண்களுக்கு முக்கியமான APP!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., சமீப காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வரும் நிலையில், அனைத்து பெண்களிடத்திலும் அரசின் ‘காவல் உதவி’செயலி இருப்பது அவசியம். இதன் மூலம், அவசர எச்சரிக்கை, இருப்பிடம் பகிர்வு, அவசர புகார் போன்றவைகளை விரைவில் செய்ய முடியும். <
News November 10, 2025
விழுப்புரம்: ரயில்வே துறையில் 3058 காலியிடங்கள்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் 3058 கிளர்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க வரும் நவ.27ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.21,700 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <


