News February 17, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
Similar News
News December 10, 2025
ராமநாதபுரம்: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News December 10, 2025
ராமநாதபுரம்: லஞ்சம் வாங்கிய VAO கைது!

பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் தனது பட்டா மாறுதலுக்காக வேந்தோனி கிராம VAO கருப்பசாமியை சந்தித்து பேசியுள்ளார். கருப்பசாமி தனக்கு ஆவனம் கிடைக்கவில்லை எனவும், தான் பரிந்துரை செய்வதற்காக ரூ.13,000 கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த நபர் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று ரசாயனம் தடவிய பணத்தை கருப்பசாமியிடம் கொடுக்கவே, அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
News December 10, 2025
ராம்நாடு: வரிசையில் நிற்க தேவையில்லை.. இனி ONLINE

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி இங்கு <


