News January 1, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஜவைரி.03 ஆம் தேதி அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம்.
Similar News
News December 1, 2025
தருமபுரி: தோட்டத்திற்கு சென்ற விவசாயிக்கு ஏற்பட்ட சோகம்!

மல்லசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி முனிவேல் (65), நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்றுள்ளார். ஆனால் மாலை நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், சந்தேகமடைந்த குடும்பத்தார் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கிணற்றின் அருகே மண் சரிந்துள்ளதை பார்த்துள்ளனர். அதன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், கிணற்றில் இறங்கிய வீரர்கள் முனிவேலின் சடலத்தை மீட்டு வந்தனர்.
News December 1, 2025
தருமபுரி: மினி லாரி மோதி தந்தை, மகன் பரிதாப பலி!

தருமபுரி: இருமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது மகன் திருஞானத்துடன் பைக்கில் வந்து கொண்டிருந்துள்ளார்.செங்கல்மேடு பகுதியில் வந்தபோது, பின்னல் வந்த மினி லாரி மோதியதில் நிலைதடுமாறி கிழே விழுந்தனர். இந்த விபத்தில் தந்தை மகன் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 1, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.01) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் குணவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராமர், தோப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்!


