News October 25, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மானாவரி நிலங்களில் விவசாய பணிகள் துவங்கியுள்ளதால் பயிர்களுக்கு அடி உரமாக போடப்படும் டிஏபி உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Similar News

News November 20, 2024

தூத்துக்குடியில் மழை தொடரும்!

image

தூத்துக்குடி உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். SHARE IT.

News November 20, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலையும் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதை தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,20) விடுமுறை அளித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

கோவில்பட்டியில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

image

அரசு நிர்வாகம் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை களையும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் இந்த நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவ.20) கோவில்பட்டி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.