News April 20, 2025
விவசாயிகள் குறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறித்த கூட்டம் ஏப்ரல் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை கலைக்கூடத்தில் நடைபெறுகிறது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை, வணிகம், வனத்துறை உள்ளிட்ட பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உள்ளனர். விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
ராணிப்பேட்டை: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News December 5, 2025
ராணிப்பேட்டையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

இராணிப்பேட்டை: கலவை தனியார் கல்லூரி வளாகத்தில் வரும் 13-12-2025 அன்று மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில், இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News December 5, 2025
ராணிப்பேட்டை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!


