News April 14, 2025
விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு(15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 28, 2025
தி.மலை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <
News November 28, 2025
தி.மலையில் பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் வேலு

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு (நவ.28) திருவண்ணாமலை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய்த்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் கருணை அடிப்படையில் சமையலர், சமையல் உதவியாளர், சத்துணவு அமைப்பாளர், அலுவலக உதவியாளர், சாலை பணியாளர், உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
News November 28, 2025
புதிய செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சர்

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு, திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக காவல் நிலையம், பேருந்து நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை Mobile App (நவ.28) இன்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது கலெக்டர் தர்ப்பகராஜ் உடனிருந்தார்.


