News May 16, 2024

விவசாயிகளுக்கு கோவை கலெக்டர் அறிவுறுத்தல்

image

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவை கொப்பரை கிலோ ரூ.111.60க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.120க்கும் விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறுமாறு கலெக்டர் அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 7, 2026

கோவை: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

image

கோவை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க

News January 7, 2026

POWER CUT: கோவையில் இப்பகுதியில் மின்தடை

image

கோவையில் இன்று (ஜன.7) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணி செட்டிபாளையம், சந்தியா நகர், முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE)

News January 7, 2026

கோவை அருகே சோக சம்பவம்!

image

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்திய சூரஜ் (27). இவர் கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு சிகிச்சை பெற்று உடல்நிலை முன்னேற்றம் அடையவில்லை. இதனால் வாழ்க்கை விரக்தி அடைந்து, சத்திய சூரஜ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து செல்வபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!