News February 16, 2025
விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

நாகை மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சை பயறு போன்ற பயறு வகைகளை சாகுபடி செய்திருக்கும் விவசாயிகள் வெள்ளை ஈ, அஸ்வினி பூச்சி போன்ற பூச்சி தாக்குதலை தவிர்க்க வரப்பு பயிராக ஆமணக்கு, மக்காச்சோளம் மற்றும் ஊடுபயிராக சூரிய காந்தி பயிரிட வேண்டும். மீத்தைல் டெமெட்டான் மருந்தினை ஏக்கர் ஒன்றுக்கு 200 மில்லியும், டைமீத்தோயேட் மருந்தினை 200 மில்லியும் தெளிக்க வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள கலெக்டர் அலுவலகத்தில் அவரசக்கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கட்டணமில்லா உதவி எண்கள் (04365-1077, 1800-233-4233) வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 81100 05558 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்து உள்ளார்.
News October 25, 2025
பழந்தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சி

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் வழங்கும் பரம்பரா கலைக்களம் கலைக்குழுவின் நிறுவனர் சவுண்டு மணி பங்குபெறும் பழந்தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சி, நாளை (அக்.26) புதிய கடற்கரையில் மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டு, பழந்தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சியை கண்டு களிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைத்துள்ளனர்.
News October 24, 2025
ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA), மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் வை.செல்வராஜ் எம்பி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை மாலி எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.


