News April 15, 2024
விவசாயம் செழிக்க வழிபாடு

சித்திரை முதல் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி கிராமத்திலுள்ள வயல்களில் நல்லோ் பூட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் விதை நெல், வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து பூஜைகள் செய்து, பின்னா் தங்களது உழவு மாடுகளுடன் வயல்களுக்கு சென்று நல்லோ் பூட்டி உழவு பணியைத் தொடங்கினா்.
Similar News
News November 8, 2025
தஞ்சாவூர்: மாணவனுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய பாலசுப்பிரமணியன் (29), எட்டாம் வகுப்பு மாணவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் பெற்றோர் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நேற்று முன்னாள் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.
News November 8, 2025
தஞ்சாவூர்: 8ம் வகுப்பு போதும்.. அரசு வேலை ரெடி!

தமிழக நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு முடித்த, 18-35 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ள ‘<
News November 8, 2025
தஞ்சை: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..


