News November 23, 2024
விழுப்புரம் விவசாயிகளுக்கு விருந்து வைக்கும் விஜய்

விக்கிரவாண்டியில் கடந்த மாதம் தவெக மாநில மாநாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இன்று கட்சித் தலைவர் விஜய் விருந்து வைக்க உள்ளார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளனர். நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
விழுப்புரம்: பஸ்சில் மது பாட்டில்கள் கடத்தியவர்கள் கைது!

திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் பொம்பூர் கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியிலிருந்து வந்த தனியார் பஸ்ஸில் இறங்கிய திருவாக்கரையைச் சேர்ந்த கோபாலகண்ணன் & வி.சாத்தனூரைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகியோரைப் பிடித்துச் சோதனை செய்தனர். இருவரும் 44 மதுபாட்டில்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
News December 8, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(டிச.07) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.