News September 28, 2024
விழுப்புரம் வழியாக ராமநாதபுரம் சிறப்பு ரயில்

தாம்பரத்திலிருந்து, விழுப்புரம் வழியாக ராமநாதபுரம் செல்லும் சிறப்பு ரயில், வாரம் மும்முறை இயக்கப்பட உள்ளது. திங்கள், வியாழன், மற்றும் சனி ஆகிய நாட்களில் தாம்பரம் மாலை 5 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் இரவு 7 மணிக்கு வருகிறது. மறுநாள் காலை 5.55க்கு ராமநாதபுரம் சென்று அடையும். விழுப்புரம் மாவட்ட மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
Similar News
News December 9, 2025
விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்
News December 9, 2025
விழுப்புரம்: மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <
News December 9, 2025
விழுப்புரம்: லஞ்சம் கேட்டால் உடனே CALL!

விழுப்புரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04146-259216) புகாரளிக்கலாம். இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினம் என்பதால் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


