News June 19, 2024

விழுப்புரம்: ரூ.1.33 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

image

விழுப்புரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்தவரப்பட்ட ரூ.1.33 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து இன்று விழுப்புரம் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வரதராஜன் என்பவர் 2000 கிராம் தங்கத்தை உரிய ஆவணமின்றி எடுத்து வந்துள்ளார். இவரை போலீசார் கைது சுமார் ரூ.1.33 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 7, 2026

வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறந்த ஆட்சியர்

image

விழுப்புரம் நகராட்சி சாலமேடு பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இன்று (மார்ச்.06) திறக்கப்பட்டது. இந்த விழாவில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான்,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணன் முன்னிலையில் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு பங்கேற்றனர்.

News March 6, 2026

தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற 2026 பொது தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (மார்ச்.06) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் உட்பட பலர் உள்ளனர்.

News March 6, 2026

விழுப்புரம்: சனி தோஷம் நீக்கும் கல்பட்டு சனி பகவான்!

image

சனி தோஷத்தை நீக்கும் புகழ் பெற்ற கோயிலாக உள்ளது விழுப்புரம் மாவட்டம் கல்பட்டில் உள்ள சனீஸ்வரர் கோயில். இங்கு சனி பகவான் 21 அடி உயரத்தில் வலது காலை காகத்தின் மீது வைத்து காட்சி தருகிறார். ஏழரை சனி, கண்ட சனி, வக்ர சனி, விரய சனி என்று எந்த சனி தோஷத்தால் பாதிப்பு இருந்தாலும் ஒருமுறை இக்கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் போதும். அவை யாவும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!