News April 20, 2025
விழுப்புரம் மாவட்ட வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க

திருவெண்ணெய்நல்லூர்-04153-290893, கண்டாச்சிபுரம்-04153-231666, மேல்மலையனூர்-9942248808, 04145-234209, மரக்காணம்-9445461915, 04147-239449, விக்கிரவாண்டி-9445461837, 04146-233132, வட்டாட்சியர், வானூர்-9445000526, 0413-2677391, விழுப்புரம்-9445000525, 04146-222554, செஞ்சி-9445000524, 04145-222007, திண்டிவனம்-9445000523, 04147-222090. *
Similar News
News September 15, 2025
விழுப்புரத்தில் இலவச பயிற்சி மூலம் 855 பேருக்கு அரசு வேலை

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் கடந்த 2010-11ம் நிதியாண்டில் இருந்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இதுவரை இலவச பயிற்சி மையத்தில் படித்து 855 பேர் அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் படித்த இளைஞர்கள், பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
News September 15, 2025
குட்கா பொருட்கள் கடத்தியவர் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தரம்சந்த் ஜங்ஷன் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த திண்டிவனத்தை சேர்ந்த உஷா தேவி மற்றும் பக்தூர் தாஸ் ஆகிய இருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 15கி எடை கொண்ட குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News September 15, 2025
விழுப்புரம் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவமால் மருதூர் பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பிரவீன் குமார் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கண்டமங்கலம் போலீசார், பிரவீன் குமாரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.