News December 31, 2024
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15 அன்று சிறப்புடன் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு இப்போட்டிகளை விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 04.01.2025 அன்று காலை 7.00 மணிக்கு கோலியனூர் கூட்ரோடு என்ற இடத்தில் துவங்கப்படும் என ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
விழுப்புரம்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 16, 2025
விழுப்புரம்: பைக், ஸ்கூட்டர் மோதல் – 2 பேர் பலி!

விழுப்புரம், மரக்காணத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், அரவிந்த் நேற்று அதே பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஸ்கூட்டரை திடீரென திருப்பிய நிலையில், பின்னால் வந்த சென்னையை சேர்ந்த சூர்யன் பலமாக மோதினார். இந்த விபத்தில் சூர்யன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், கிருஷ்ணனும் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 16, 2025
விழுப்புரத்தில் 453 பேர் ஆப்சென்ட்!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, 16 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 4,001 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 3,548 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 453 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


