News March 21, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் 2.34 லட்சம் விவசாயிகள் பயன்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில், கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை 2,34,881 விவசாயிகள், தங்களது விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து பயனடைந்துள்ளனர். இதில் விழுப்புரம்-27693, திண்டிவனம்-17785, செஞ்சி-47663, அரகண்டநல்லூர்-70571, அவலூர்பேட்டை-37659, விக்கிரவாண்டி-33268, மரக்காணம்-45, வளத்தி-207 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

Similar News

News March 31, 2025

பைக் மீது பேருந்து மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு

image

திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ், ராகவன். நண்பர்களான இருவரும், நேற்று (மார்.30) காலை பைக்கில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்றனர். பைக்கை ராகவன் ஓட்டினார். அப்போது எதிரில் வந்த அரசு விரைவு பேருந்து பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தினேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராகவன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

News March 30, 2025

விழுப்புரம் விவசாயிகள் கவனத்திற்கு 

image

விழுப்புரம் மாவட்டத்தில் பி.எம் கிசான் ஊக்கத்தொகை பெறும் 89,958 விவசாயிகளில் தற்போது வரை 50,404 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 39,554 விவசாயிகள் ஏப்ரல் -8 ஆம் தேதிக்குள் தனி அடையாள எண் பெற வேண்டும், அப்போதுதான்  பி.எம் கிசான் ஊக்கத்தொகை  தொடர்ந்து பெற முடியும்  என்று வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 30, 2025

யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். <>ஷேர் <<>>செய்யுங்கள்

error: Content is protected !!