News September 28, 2024
விழுப்புரம் மாவட்டத்தில் தனி பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு மாவட்டத்தில் மூன்றாண்டு பணி நிறைவு செய்த 24 தனிப்பிரிவு காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் ஆணையிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களில் பணி புரிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிதாக நியமிக்கப்பட உள்ளவர்கள் விரைவில் பணியமத்தப்படுவார்கள்.
Similar News
News December 21, 2025
விழுப்புரம்: சேலையில் தீ பற்றி இளம்பெண் பலி!

விழுப்புரம்: கழிக்குப்பத்தைச் சேர்ந்த சுசீலா, தனது மகன் சுமன், மகள் அனுசுயா (26) வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுசீலா மற்றும் சுமன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அனுசுயா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வாசலில் வைத்திருந்த விளக்கில் இருந்து அனுசுயா சேலையில் தீ பற்றியதில் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
News December 21, 2025
விழுப்புரத்தில் பைக் – பஸ் மோதி கோர விபத்து!

விழுப்புரம்: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜானகிபுரம் மேம்பாலம் பகுதியில் நேற்று விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் நிலை தடுமாறி பேருந்து மீது மோதியதில், மூவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு உடனடியாக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 21, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


