News August 16, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை

image

விழுப்புரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், விழுப்புரம் நகரம், சென்னை-திருச்சி நெடுஞ்சாலைகள், செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆா்.நகா், நன்னாடு, பாப்பான்குளம், திருவமாத்தூா்,மரகதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், திண்டிவனம், சொர்ணாவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் தடை செய்யப்பட உள்ளது.

Similar News

News September 16, 2025

விழுப்புரத்தில் உள்ளவர்களுக்கு குட் நியூஸ்!

image

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 16, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.15 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 16, 2025

வக்ஃபு திருத்தச் சட்டம்: தீர்ப்பை வரவேற்ற விழுப்புரம் எம்பி!

image

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உச்சநீதிமன்றத்தின் வக்ஃபு திருத்தச் சட்டத்தை வரவேற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ‘வக்ஃபு திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். மக்களிடம் நீதித்துறையின் மீதான நம்பிக்கை நசிந்துவரும் சூழலில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது’ என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!