News August 14, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 16ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 8ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் முதல் பொறியியல், தொழில்பயிற்சி, செவிலியா், மருந்தாளுநா் படித்தவா்கள் பங்கேற்று பயன்பெறலாம். 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்க உள்ளன. மேலும், விவரங்களுக்கு 9499055906, 7010827725 எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

Similar News

News December 1, 2025

விழுப்புரம்: தட்டிக்கேட்ட முதியவருக்கு கத்திக்குத்து!

image

விழுப்புரம்: எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (68). நேற்று முன்தினம், இரவு 11 மணிக்கு அவரது வீட்டின் அருகே 2 பேர் மதுபோதையில் சத்தமாக பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட தேவராஜை, ஆத்திரத்தில் அந்த 2 பேரும் கத்தியால் குத்தியுள்ளனர். தொடர்ந்து, முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முருகன், (25), ராம்குமார் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News December 1, 2025

விழுப்புரம்: மனைவி பிரிந்ததால் கணவன் விபரீத முடிவு!

image

மரக்காணம் வட்டம், பனிச்சமேடுகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ், அவரது மனைவி ரேகா. இவர்களிடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த சதீஷ் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 1, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!