News August 10, 2024
விழுப்புரம் மாவட்டத்தின் மழை அளவு

விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய மழை அளவு விவரம் வெளியாகியுள்ளது. விழுப்புரம் 22 மி.மீ, கோலியனூர் 20 மி.மீ, வளவனூர் 40 மி.லி, கெடார் 65 மி.மீ, முண்டியம்பாக்கம் 56 மி.மீ, சூரப்பட்டு 60 மி. மீ, வானூர் 25 மி.மீ, திண்டிவனம் 22 மி.மீ, மரக்காணம் 39 மி. மீ, செஞ்சி 21 மி. மீ, வல்லம் 53 மி. மீ, அவலூர்பேட்டை 92 மி.மீ பதிவாகியுள்ளது.
Similar News
News December 2, 2025
விழுப்புரம்: பைக் மோதி ஒருவர் பரிதாப பலி

கிளியனூர் அடுத்த டீ பரங்கிணி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமுத்து இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் புதுக்குப்பத்தில் நிகழ்ச்சிக்கு சென்று தன் நண்பருடன் வரும் போது டீ பரங்கினி சாலையில் எதிரே வந்த பைக் மோதி மோதி செல்லமுத்து படுகாயமடைந்தார். இருவரையும் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் செல்லமுத்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News December 2, 2025
தவறவிட்ட தங்க நகை: மீட்டு தந்த போலீசார்

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த பிரசாந்தி என்பவர் திருவண்ணாமலையிலிருந்து இன்று சென்னை திரும்பும் வழியில் திண்டிவனம் அருகே உள்ள உணவகத்தில் தவறவிட்ட 18 சவரன் தங்க நகைகள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை ரோஷனை போலீசார் உரியவரிடம் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
News December 2, 2025
விழுப்புரம்: இரவு ரோந்துப் பணி காவல்துறையினர் விவரம்!

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்


