News March 24, 2025

விழுப்புரம்: மாற்றுத்திறனாளி பெண்ணை அலைக்கழிக்கும் அலுவலர்கள்

image

விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் வித்யாஸ்ரீ, 2 கைகள் அற்ற மாற்றுத் திறனாளி. கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியது. அது தொடர்பாக பட்டா மற்றும் வரைபடங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 6 மாதங்களாக அலைந்தும், இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக இன்று(மார்ச்.24) விழுப்பரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Similar News

News August 31, 2025

விக்கிரவாண்டி: நாளை முதல் சுங்ககட்டணம் உயர்வு

image

சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே அமைந்துள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப்.1 (திங்கள்கிழமை) முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் உயருகிறது. கார்/வேனுக்கு ஒருமுறை சென்று திரும்பி வருவதற்கு ரூ.155 பதில் ரூ.160 வசூலிக்கப்படும்.

News August 31, 2025

ஓணம் முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில் சேவை

image

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து சூரத் நகரத்திற்கு நாளை(செப்.01) ஓணம் முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை(ஒருவழி தடம்) தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை காலை 10.30 மணி அளவில் தொடங்கும் இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, சென்னை எக்மோர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருச்சூர் வழியாக சூரத் நகரை சென்றடைகிறது. இந்த ரயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 31, 2025

விழுப்புரம்: ரூ.1,500 வேண்டுமா? இதை பண்ணுங்க!

image

விழுப்புரம்: மண்புழு உரம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரப்படுக்கைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, அதற்கான பட்டியலை சமர்ப்பித்தால், ரூ.1,500 மானியமாகப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது உழவன் செயலியையோ அணுகலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!