News October 18, 2025
விழுப்புரம் மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

விழுப்புரம் மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 11, 2025
விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” (டிச.11) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்
News December 11, 2025
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் பரிசு

விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் பரிசு தொகையினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (டிச.11) வழங்கினார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
News December 11, 2025
விழுப்புரம்:மாற்றுதிறனாளிக்கு உதவிய எஸ். ஐ: பாராட்டிய எஸ்.பி!

திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டிகுடிசை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தனது சொந்த செலவில் கழிப்பறையை காவல் ஆய்வாளர் அழகிரி கட்டி கொடுத்தார். இந்த நிகழ்வை பாராட்டி, இன்று (டிச.11) விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரியை,நேரில் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


