News April 29, 2025
விழுப்புரம்: பெட்ரோல் குண்டு வீசிய வாலிபருக்கு குண்டாஸ்

விழுப்புரத்தில் மொபைல் சர்வீஸ் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று (ஏப்.28) கைது செய்யப்பட்டார். விழுப்புரத்தை சேர்ந்த அருண்குமார், கடந்த மார்ச் 28ம் தேதி விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள மொபைல் சர்வீஸ் கடையில் தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தார். டவுன் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று அவரை குண்டாஸில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 23, 2025
விழுப்புரம்: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் இந்த <
News November 23, 2025
விழுப்புரம்: மின்கம்பம் பழுதா? உடனே புகார்!

தமிழக மின்வாரியத்தின் கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை உடனே புகார் செய்ய, இதற்காக 24 மணி நேர ஹெல்ப் லைன் எண் 1912-க்கு கால் செய்யலாம். மேலும், <
News November 23, 2025
விழுப்புரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

இன்றைய (நவம்பர் 23) சந்தை நிலவரப்படி, விழுப்புரத்தில் நாட்டு கோழி ஒரு கிலோ 450 ரூபாய்க்கும், பிராய்லர் கோழி 190 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டுக்கறி ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மீன் வகைகளில் சிறிய வஞ்சரம் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், சங்கரா ஒரு கிலோ 400 ரூபாய்க்கும், தேங்காய் பாறை 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


