News April 24, 2025
விழுப்புரம்: தலையெழுத்து மாற வேண்டுமா …? இங்கு போங்க

விழுப்புரம் அருகே கோலியனூர் வாலீஸ்வரர் கோயில் வரலாறு. சாகாவரம் பெற்றிருந்த மகிஷாசுரன் தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான், அவனை அழிக்கச் சிவன் உத்தரவிட்டார். அவனை அழித்தவர்களுக்கு தோஷம் உண்டானது, தோஷம் நீங்க இத்தலத்துள்ள சிவபெருமாளை வணங்கி நிவர்த்தி அடைந்தனர். இந்த கோயிலில் வழிபட்டால் தலையெழுத்து மாறுமென்பது நம்பிக்கை.மாற்றத்தை எதிர்பார்க்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 14, 2025
விழுப்புரம் காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு

விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு மது விலக்கு சோதனை சாவடி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் சிறப்பாக பணி புரிந்த காவலர்களை இன்று (நவ.14) நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பாராட்டினார். கெங்காரம்பாளையம் சோதனை சாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர்கள்.குணசீலன், விஜயகுமார் மற்றும் காவலர் வினோத் ஆகியோர் புதுச்சேரி மில்லி சாராயம் பறிமுதல் செய்தனர்.
News November 14, 2025
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி ஆட்சியர் ஆய்வு

75 விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராதாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆய்வு நடைபெற்றது. வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் (BLO APP) உள்ளீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,அவர்கள் இன்று (நவ.14) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 14, 2025
மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 72-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடும் வகையில் இன்று (நவ.14) “மினி மாரத்தான்” போட்டியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் விழுப்புரம் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏ.விஜயசக்தி உட்பட பலர் உள்ளனர்.


