News February 17, 2025
விழுப்புரம்-தஞ்சாவூர் இரட்டை ரயில் பாதை: எம்.பி. கோரிக்கை

விழுப்புரம் -தஞ்சாவூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற, சட்டபேரவை உறுப்பினர்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர்ந்து, ரயில்வே துறை மூலம் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரட்டை ரயில் பாதை அமைப்பது குறித்து ரயில்வே அமைச்சரிடம் மயிலாடுதுறை எம்.பி. ஆர்.சுதா கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 8, 2026
விழுப்புரம்: சீறி பாய்ந்த பைக் – கடைசியில் TWIST!

விழுப்புரம் மேற்கு போலீசார், நான்குமுனை சிக்னல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரம் தக்கா தெருவை சேர்ந்த ஷாருக், (22) மற்றும் அருளவாடியை சேர்ந்த ராஜி (25) ஆகியோர் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் பைக்குகளில் அதிவேகமாக ஓட்டி வந்தது தெரியவந்தது. விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து ஷாருக், ராஜியை கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
News January 8, 2026
விழுப்புரம்: இனி மலிவு விலையில் Sleeper டிக்கெட்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., எப்போதும் பேருந்தில் அதிக விலை கொடுத்து டிக்கெட் புக் செய்கிறீர்களா? ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்து பயணம் செய்கிறீர்களா? கவலை வேண்டாம். உடனடியாக இங்கே<
News January 8, 2026
அறிவித்தார் விழுப்புரம் கலெக்டர் !

தமிழகத்தில் வரும் 9, 10, 11 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை, விவசாயிகள் அவசியம் கடைபிடித்திட வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை பெருமளவில் விவசாயிகள் தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.


