News April 3, 2025
விழுப்புரம் சுற்றுவட்டாரங்களில் மழை

விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. மரக்காணம், செஞ்சி, தீவனூர், நெடி, மோழியனூர், வண்டிமேடு, வி.மருதூர், விரட்டிக்குப்பம், சாலமேடு, ராஜாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
Similar News
News February 19, 2026
விழுப்புரம்: விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம்

விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக புகார்களை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயம் சார்ந்த பிரச்னைகள், கோரிக்கைகள் முன்வைப்பதற்கு மாதந்தோறும் விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்திற்கான கூட்டம், விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று(பிப்.18) நடைபெற்றது.
News February 19, 2026
விக்கிரவாண்டியில் அதிரடி கைது!

விழுப்புரம்: விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், மேல்பாதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்த போது, தடை செயப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பெட்டிக்கடைக்காரர் பிரபு(45) என்பவரைக் கைது செய்த போலீசார், 42 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News February 19, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 18) இரவு முதல் இன்று (பிப். 19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


