News March 27, 2024

விழுப்புரம்: கூரை வீடு எரிந்து நாசம்

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் 7வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரும் மனைவி உமாவும் நேற்று (மார்ச் 26) வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென இவர்களது கூரைவீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து வந்த மரக்காணம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 31, 2025

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்

image

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் செப்டம்பர் 1-ம் தேதி நள்ளிரவு முதல் உயர்த்தப்பட உள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

News August 31, 2025

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வளத்தியில் 12 மி.மீ, திருவெண்ணெய்நல்லூர் 8 மி.மீ, வளவனூரில் 2.8 மி.மீ, அரசூரில் 2.5 மி.மீ, அவலூர்பேட்டையில் 2 மி.மீ, விழுப்புரத்தில் 2 மி.மீ, செஞ்சியில் 1.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழை விவசாயிகளுக்கு ஓரளவு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 31, 2025

விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்க கோரிக்கை

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான உதிரிச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜேஷ்டா தேவி, கொற்றவை , சப்தமாதா், விஷ்ணு, முருகன், சூரியன், தீா்த்தங்கரா் உள்ளிட்ட கடவுளா்களின் சிலைகள் மட்டுமல்லாது, வீரா்களின் நினைவுச் சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றை உரிய முறையில் பாதுகாக்க விழுப்புரம் அருங்காட்சியகம் அமைக்க வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை

error: Content is protected !!