News August 26, 2024
விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் திருமண வரவேற்பு விழா

விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் சுருதன்ஜெய் நாராயணனின் திருமண வரவேற்பு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் ம.ஜெயச்சந்திரன், ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் RS. வாசன், கலைச்செல்வி, சச்சிதானந்தம், மாவட்ட கவுன்சிலர்கள் சிவகுமார், அன்புமணி, ஒன்றிய குழு துணை தலைவர் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 22, 2025
விழுப்புரம் மாவட்டம் மழை நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்தது, இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை அளவு விழுப்புரம் 168 மில்லி மீட்டர் கோலியனூர் 100 மில்லி மீட்டர் வளவனூர் 106 மில்லி மீட்டர் கெடார் 115 மில்லி மீட்டர் முண்டியம்பாக்கம் 95 மில்லி மீட்டர் வானூர் 184 மில்லி மீட்டர் திண்டிவனம் 103 மில்லி மீட்டர் செஞ்சி 123 மில்லி மீட்டர் வளத்தி 84 மில்லி மீட்டர். இன்றும் மழை இருக்கும்.
News October 22, 2025
விழுப்புரம்: இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க மாவட்ட சேர்மன் ஏற்பாடு

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க கட்டணமில்லா ஜே.சி.பியை விழுப்புரம் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து நேற்றிரவு (அக்.21) அவர் வெளியிட்ட அறிக்கையில்; விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால், இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க ஜேசிபி மற்றும் தண்ணீர் டேங்குகளை கட்டணமின்றி பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
News October 22, 2025
விழுப்புரம்: ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

விழுப்புரம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணு