News April 20, 2025
விழுப்புரம்: கடன் தொல்லை நீங்கி செழிப்பாக வேண்டுமா?

செல்வத்திற்கு அதிபதி லட்சுமி. அதைக் காப்பவர் குபேரன். இவ்விருவரும் அருள்பாலிக்கும் மகாலட்சுமி குபேரர் கோவில், விழுப்புரம் அருகே திருநகரில் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த இந்த கோவிலில் பௌர்ணமி, அமாவாசையில் மகாலட்சுமி மற்றும் குபேரனுக்கு பூஜை செய்தால் போதும், உங்கள் வாழ்வில் கடன் நீங்கி செல்வம் செழித்தோங்கும் என்பது ஐதீகம். *நண்பர்களுக்கும் கடனை தீர்க்கும் லட்சுமி குபேரரை தெரியப்படுத்துங்கள்*
Similar News
News November 24, 2025
விழுப்புரம்: ரூ.63,200 சம்பளத்தில் அரசு வேலை – இன்றே கடைசி!

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனம் (BRO) வெளியிட்டுள்ள Vehicle Mechanic உள்ளிட்ட 542 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, 10ம் வகுப்பு, ITI முடித்த 18 – 25 வயதுள்ள நபர்கள் <
News November 24, 2025
விழுப்புரம்: தனிமை வாட்டியதால் பெண் தற்கொலை!

விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள சஞ்சீவிராயன்பேட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி உமா. முருகன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து தனியாக வசித்து வந்த உமா விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 24, 2025
விழுப்புரம்: ரூ.2000 பணத்திற்காக தாக்கப்பட்ட வாலிபர்!

விழுப்புரம்: மணி நகரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது தாய் ரேகா, வி.மருதுாரைச் சேர்ந்த சற்குணம் என்பவரிடம் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ரூ.10,000 வாங்கியுள்ளார். இதில் ரூ. 8,000 திருப்பி தந்த நிலையில், மீதம் ரூ. 2,000 தர வேண்டியிருந்தது. மீதி பணத்தை சற்குணத்தின் பேரன் பாலாஜி நேற்று முன்தினம் விக்னேஷிடம் கேட்டு பயங்கரமாக தாக்கியுள்ளார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


