News March 21, 2024
விழுப்புரம்: ஒரு அரசியல்வாதிகூட எட்டிப் பார்க்கவில்லை

விழுப்புரம் மக்களவை (தனி) தொகுதி வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 20) துவங்கியது. மக்களவை தனித் தொகுதியான விழுப்புரத்தில் நேற்று தேர்தல் அலுவலர் காலை 11 மணி முதல் 3 மணி வரை காத்திருந்தார். ஆனால் மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. மனு தாக்கல் நேற்று முதல் வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 28ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, 30ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 18, 2025
நாற்றங்கால் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் மேலகொந்தை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை இணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் புதிய நாற்றங்கால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (டிச.18) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி செயற்பொறியாளர் நித்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
News December 18, 2025
விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நாளை(டிச.19) காளை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாய சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் எனவும் அறிவித்துள்ளார்.
News December 18, 2025
செஞ்சியில் பள்ளத்தில் இறங்கிய காரால் பரபரப்பு!

செஞ்சி சிங்கவரம் சாலையில் இன்று (டிச.18) மேல்மலையனூர் நோக்கிச் சென்ற சொகுசு கார் சாலையோர கால்வாயில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் சாலையோர கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்காததால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இந்த நிலையில், காரில் பயணம் செய்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.


