News May 12, 2024
விழுப்புரம்: ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி நேற்று நேரில் பார்வையிட்டதுடன், அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டார்.
Similar News
News August 11, 2025
அன்புமணி ராமதாஸின் நடைப்பயணம் ஒத்திவைப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் திண்டிவனத்தில் இன்று (ஆக.11) நடைபெறவிருந்த பாமக தலைவர் அன்புமணியின் நடைபயணம் ஒத்திவைப்பு. இன்று நடைபெறவிருந்த நடைபயணம் நாளை மறுநாள் (ஆக.13) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இது ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் சார்பில் தகவல் வந்துள்ளது. குறிப்பிட்ட நாளில் கண்டிப்பாக நடைபயணம் நடைபெறும் என்று விளக்கம்.
News August 10, 2025
அரசு கல்லூரியில் முதுநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

திண்டிவனம் கோவிந்தசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புகளான எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.காம் மாணவர் சேர்க்கைக்கு நாளை ஆகஸ்ட் 11 திங்கட்கிழமை அன்று முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வும், ஆகஸ்ட் 13ஆம் தேதி முதுநிலை அனைத்து பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் நாராயணன் தெரிவித்துள்ளார்
News August 10, 2025
விழுப்புரம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(ஆக.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.