News October 23, 2024
விழுப்புரம் அருகே லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 9, 2026
சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழுக்கூட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (ஜன.09) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித், உதவி ஆட்சியர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News January 9, 2026
விழுப்புரத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியம்!

தமிழக அரசின் TANSIM இயக்கம், புதிய பிசினஸ் ஐடியா வைத்துள்ள இளைஞர்களுக்கு ₹10 லட்சம் வரை மானியம் (Seed Grant) வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஸ்டார்ட்-அப்களுக்கு நிதி உதவி மட்டுமன்றி, தொழில் வழிகாட்டுதலும் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள தொழில்முனைவோர் <
News January 9, 2026
விழுப்புரம்: உங்க கனவ சொல்லுங்க திட்டம்

தமிழகத்திலுள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களது கனவுகளை கேட்டறியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி
விழுப்புரம் சட்டக்கல்லூரி கூட்டரங்கில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைப்பெற்றது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ சிறப்புரை ஆற்றினார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, செஞ்சி மஸ்தான், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்


