News April 22, 2025

விழுப்புரம் அருகே ஆற்று மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

image

மரகதபுரம் பகுதியில் தென்பெண்ணையாற்றில் கனரக வாகனங்கள் மூலம் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. விழுப்புரம் தாலுகா போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனா். அங்கு கனரக வாகனங்கள் மூலம் ஆற்று மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டா்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

விழுப்புரம்: தனிமை வாட்டியதால் பெண் தற்கொலை!

image

விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள சஞ்சீவிராயன்பேட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி உமா. முருகன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து தனியாக வசித்து வந்த உமா விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 24, 2025

விழுப்புரம்: ரூ.2000 பணத்திற்காக தாக்கப்பட்ட வாலிபர்!

image

விழுப்புரம்: மணி நகரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது தாய் ரேகா, வி.மருதுாரைச் சேர்ந்த சற்குணம் என்பவரிடம் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ரூ.10,000 வாங்கியுள்ளார். இதில் ரூ. 8,000 திருப்பி தந்த நிலையில், மீதம் ரூ. 2,000 தர வேண்டியிருந்தது. மீதி பணத்தை சற்குணத்தின் பேரன் பாலாஜி நேற்று முன்தினம் விக்னேஷிடம் கேட்டு பயங்கரமாக தாக்கியுள்ளார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 24, 2025

விழுப்புரம்: கிணற்றில் குளித்த வாலிபர் வலிப்பு வந்து இறப்பு!

image

விழுப்புரம்: செல்லங்குப்பத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (32), நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றார். நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பாத நிலையில், தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர், அவரை பிணமாக மீட்டனர். குளித்துக்கொண்டிருந்த போது அவருக்கு திடீரென வலிப்பு வந்ததால் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

error: Content is protected !!