News May 17, 2024
விழுப்புரம்: அம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ அருங்குணம் கிராமத்தில் நேற்று (மே 16) அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவில் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் திமுக மரக்காணம் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், தயாளன் தென்களவாய் பழனி உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
Similar News
News October 3, 2025
மதுவிலக்கு வேட்டை: 26 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மதுவிலக்கு வேட்டையில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 26 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 584 மது பாட்டில்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 17 குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
News October 2, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.2) இரவு 10.00 மணி முதல் (அக்.3) காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News October 2, 2025
விழுப்புரம் : அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, <