News March 20, 2024
விழுப்புரம்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, விழுப்புரம் எம்பி தொகுதியின் வேட்பாளராக விழுப்புரம் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஜெ.பாக்யராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News December 3, 2025
விழுப்புரம்:வீடூர் அணையில் குளிக்க அனுமதி இல்லை!

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீடூர் அணையில் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் யாரும் அணையில் குளிக்கவும் இறங்கவோ அனுமதி இல்லை என நீர்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அணையின் அருகாமையில் அதற்கான எச்சரிக்கை பலகையும் இன்று (டிச.03) நீர்வளத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
திண்டிவனம் நகராட்சியில் ஆட்சியர் ஷேக்.அப்துல் ரஹ்மான் ஆய்வு

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட வகாஃப் நகரில் உள்ள கருணாவூர் வாய்க்காலினை அகலப்படுத்துவது குறித்து ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (டிச.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் திரு.அ.ல.ஆகாஷ், திண்டிவனம் நகராட்சி ஆணையர் திருமதி.பானுமதி, நிண்டிவனம் வருணய் வட்டாட்சியர் திருயுவராஜ் உட்பட பலர் உள்ளனர்.
News December 3, 2025
விழுப்புரம்: மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பலி

டி.புதுப்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி தங்கமணி. இவருக்கு மனைவி மற்றும் 5 மாத பெண் குழந்தை உள்ளனர். இவர், நேற்று காலையில் குளித்து முடித்து, கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த தனது உடையை எடுத்துள்ளார். அப்போது, மின்சார வயரிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு, இரும்புக் கம்பியில் பரவியிருந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


