News October 25, 2024
விழுப்புரத்தில் 3 மி.மீ. மழை பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (அக்.25) காலை 8.30 மணி நிலவரப்படி, விழுப்புரத்தில் 3 மில்லி மீட்டர் மழையும், மரக்காணத்தில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால், மீண்டும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 7, 2026
விழுப்புரம் இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” (ஜன.6) இன்று இரவு 11 மணி முதல் நாளை (ஜன.7) காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்
News January 7, 2026
வானூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆட்சியர் ஆய்வு

வானூர் வட்டம் வானூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுவரும் கூடுதல் மருத்துவமனை கட்டடப்பணிகளை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (ஜன.06) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வானூர் வருவாய் வட்டாட்சியர் வித்யாதரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கலந்து கொண்டனர்.
News January 6, 2026
விழுப்புரத்தில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

விழுப்புரத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <


