News August 18, 2024

விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தேதி அறிவிப்பு

image

விழுப்புரம் கோட்டத்தில் கோட்ட அளவிலான ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் எதிர்வரும் 20.08.2024 அன்று விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களுக்குட்பட்ட அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 1, 2025

விழுப்புரம்: தறிகெட்டு ஓடிய பைக்; இருவர் கைது!

image

விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையம் காவலர்கள் நேற்று அக்.31 வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பாச்சனூர் பகுதியை சேர்ந்த ராமு கானையைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் தங்கள் பைக்கில் மக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்றது தெரியவந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவரது வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

News November 1, 2025

விழுப்புரம்: குட்கா விற்ற இருவர் கைது

image

திண்டிவனம் நேற்று அக்.31 மாலை, ரோஷணை பாட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள செந்தில்ராஜ், என்பவரின் பங்க் கடையில் சோதனை நடத்தினர். அவரது கடையில் 500க்கு மேற்பட்ட பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பிடிபட்ட அவரிடம் விசாரித்த போது, திண்டிவனத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, என்பவரிடமிருந்து குட்கா வாங்கியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.

News November 1, 2025

71 ஆயிரம் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம்

image

தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 71 ஆயிரம் பயனாளிகள் வீடுகளுக்கு வரும் 3, 4, 5 ஆகிய தினங்களில் பொதுவிநியோகம் செய்யப்படும் என ஆட்சியர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!