News March 19, 2024
விழுப்புரத்தில் மீண்டும் ரவிக்குமார் போட்டி

மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, தற்போது அங்கு எம்பியாக உள்ள ரவிக்குமாரே மீண்டும் களம் காண்கிறார். கடந்தமுறை உதயசூரியன் சின்னத்தில் நின்ற அவர் இம்முறை பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். தே.ஜ. கூட்டணியில் பாமக இங்கு களம் இறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 24, 2025
விழுப்புரத்திற்கு பெருமை சேர்த்த கபடி வீராங்கனை

பஹ்ரைன் நாட்டில் நேற்று (அக்.23) இரவு நடந்த U-18 மகளிர் இறுதிப் போட்டியில் இந்திய கபடி அணி ஈரான் அணியை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இதில் விழுப்புரம் நகரம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த இளம் கபடி வீராங்கனை கார்த்திகா துணை கேப்டனாக பங்கேற்று சாதித்துள்ளார். இந்த வெற்றி விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு பெருமையையும், இளம் வீரர்களுக்கு உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.
News October 24, 2025
விழுப்புரம்: மழையால் மின் தடையா..? உடனே CALL!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 24, 2025
விழுப்புரம்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <


