News May 16, 2024
விழுப்புரத்தில் மழை பெய்யும்

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 20, 2025
விழுப்புரம்: வீட்டில் செல்வம் பெருக உகுந்த நாள்

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், கடன் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க.
News October 19, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் 19 ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி எண் வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
News October 19, 2025
விழுப்புரம்: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE